கள்ளக்காதலியின் அண்ணனை கத்தியால் குத்திய நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இடையர்பாளையம் பகுதியில் கூலி தொழிலாளியான ராஜகோபால் என்பவர் வசித்து வருகிறார்.இவருக்கு வேலாண்டிபாளையத்தில் இருக்கும் திருமணமான ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த அந்த பெண்ணின் பெற்றோர் ராஜகோபாலனை கண்டித்துள்ளனர். ஆனாலும் ராஜகோபால் அந்தப் பெண்ணுடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார்.
இந்நிலையில் தனது கள்ளக்காதலியை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு ராஜகோபால் சென்றுள்ளார்.அப்போது அந்த பெண்ணின் அண்ணனான ஜான்மகேந்திரன் என்பவர் இருவரையும் கண்டித்துள்ளார். இதனையடுத்து கோபமடைந்த ராஜகோபால் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜான் மகேந்திரனை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்று விட்டார்.
இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக படுகாயம் அடைந்த மகேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து ஜான் மகேந்திரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜகோபால் தீவிரமாக தேடி வருகின்றனர்.