திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் தோட்டக்கலை கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியின் விடுதியில் ஏராளமான மாணவ மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் விடுதியில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி மாணவ மாணவிகள் ஒட்டன்சத்திரம் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட சென்றுள்ளனர். இது குறித்த தகவல் அறிந்த கல்லூரி நிர்வாகம் அவர்களை உடனடியாக தடுத்து நிறுத்தியது. இதனால் அவர்கள் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அவர்கள் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கல்லூரி நிர்வாகதிடம் பலமுறை கோரியும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அப்படியே விட்டு விட்டனர் என்று குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் கல்லூரிக்கு விரைந்து வந்து மாணவ மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதில் 15 நாட்களுக்குள் தேவையான அடிப்படை வசதிகள் கல்லூரி நிர்வாகம் சார்பில் நிறைவேற்றித் தரப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர். இதற்கு கல்லூரி நிர்வாகமும் ஒப்புக்கொண்டதால் மாணவ மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றுள்ளனர்.