Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நீ ஏன் அப்படி சொன்ன…? கல்லூரி மாணவனுக்கு நடந்த விபரீதம்… உறவினரின் கொடூர செயல்…!!

கல்லூரி மாணவன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் சிவராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொதுப்பணித்துறையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளான். மேலும் அதே ஊரில் இவரது உறவினரான பாஸ்கர் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்தும், ஆடு,மாடுகள் மேய்ச்சல் தொழிலும் செய்து வந்துள்ளார். இந்நிலையில் பாஸ்கருக்கு குடி, கஞ்சா போன்ற கெட்ட பழக்கங்கள் ரொம்ப நாளாக இருந்து வந்ததால் கார்த்திக் அவருக்கு அறிவுரை கூறி அதனை கைவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆனால் பாஸ்கர் அதனை சிறிதும் பொருட்படுத்தாததால் அவரின் பெற்றோரிடம் கார்த்திக் இதுகுறித்து பேசியுள்ளார். அதன்பின் வீட்டிற்கு வந்த பாஸ்கரிடம் அவரது பெற்றோர் கெட்ட பழக்கங்களை விடுமாறு கண்டித்துள்ளனர். இந்நிலையில் பாஸ்கர் வழக்கம்போல் ஆடு, மாடுகளை மேய்த்து வரும் வழியில் கார்த்திக் ஒரு சேதமடைந்த உண்டியலை வைத்து சரி பார்த்துக் கொண்டிருந்தார். இதனையடுத்து பாஸ்கர் கார்த்திக்கிடம் சென்று என்னைப் பற்றி எப்படி என் பெற்றோரிடம் நீ குறை கூறலாம்? என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் சண்டை பெரிதானதால் பாஸ்கர் மிகவும் கோபமடைந்து கார்த்திக்கை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.

அதன் பின்னர் பாஸ்கர் அந்த இடத்திலிருந்து  தப்பிச் சென்றுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்த்திக்கின் உடலை மீட்டு அருகில் உள்ள தென்காசி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆய்க்குடி என்ற இடத்தில் பதுங்கி இருந்த பாஸ்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |