Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கிறிஸ்மஸ் கொண்டாட்டம்…” கல்லூரி விடுதியில் ஏற்பட்ட மோதல்”… பின்னர் நேர்ந்த விபரீதம்..!!

கல்லூரி விடுதியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஜமீன் கொரட்டூர் என்ற பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரி விடுதியில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த  மாணவர்கள்  தங்கி  படித்து வருகின்றனர். இங்கு பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா பகுதியை  சேர்ந்த ஆதித்யா சர்மா(20) என்ற மாணவர் விடுதியில் தங்கி மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை விடுதியில் உள்ள மாணவர்கள் அனைவரும் சேர்ந்து கிறிஸ்துமஸ் விழாவை  கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

இதில் மூன்றாம் ஆண்டு மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்கள் இடையே திடீரென தகராறு  ஏற்பட்டுள்ளது. தகராறில் இரு தரப்பு மாணவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த தாக்குதலில் திடீரென்று  மாணவர் ஆதித்யா சர்மாவின் கழுத்தில் பிளாஸ்டிக் நாற்காலியின்  கால் பகுதியை உடைத்து மாணவர்கள் சிலர் குத்தியுள்ளனர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்துள்ளார்.

இதனை பார்த்த  மற்ற மாணவர்கள் அவரை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனை சிகிச்சைக்காக  கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆதித்யா சர்மா  ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.  இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆதித்யாவை தாக்கியவர்கள் யார் என்று தெரியவில்லை. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விடுதியில் தங்கியிருந்த அனைத்து மாணவர்களிடமும் விசாரணைநடத்தி வருகின்றனர்.

Categories

Tech |