Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு செல்வதாக கூறி சென்ற கல்லூரி மாணவி…. பெற்றோர் அளித்த பரபரப்பு புகார்…. தேடும் பணியில் போலீசார்….!!

கல்லூரி மாணவி திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உவரி பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அல்ட்ரின் ரேஷ்மா என்ற மகள் இருந்துள்ளார். இவர் நெல்லையில் உள்ள விடுதியில் தங்கியிருந்து ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அல்ட்ரின் ரேஷ்மா கடந்த 11-ஆம் தேதி கல்லூரி விடுதியில் இருந்து வீட்டிற்கு செல்வதாக கூறி புது பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார்.

ஆனால் அல்ட்ரின் ரேஷ்மா அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அல்ட்ரின் ரேஷ்மாவை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவரை பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. இதுகுறித்து ரமேஷ் பெருமாள்புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கல்லூரி மாணவியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |