கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள உதச்சிகோட்டை பகுதியில் ஹென்றிதாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு அகிலா என்ற மகள் உள்ளார். இவர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அகிலாவின் பெற்றோர் ஒரு சுப நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டனர். அப்போது அகிலா வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனையடுத்து பெற்றோர் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது கதவு பூட்டியிருந்தது. இந்நிலையில் கதவை தட்டியும் உள்ளே இருந்து எந்த சத்தமும் வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் மாடிக்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அகிலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் அகிலாவின் உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.