கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள படியூர் தெற்கு பாளையம் பகுதியில் நந்தகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காயத்ரி என்ற மகள் இருந்துள்ளார். இவர் முள்ளிபுரம் பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் காயத்ரியின் குடும்பத்தினர் திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்காக சென்றிருந்தனர். இதனால் காயத்ரி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் காயத்ரி தனது அறையில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று காயத்ரியை உடனடியாக மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு காயத்ரியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காங்கேயம் காவல்துறையினர் காயத்ரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.