Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நடந்து சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவி…. வழியில் நடந்த சம்பவம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

கல்லூரி மாணவியின் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற 2 மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பக்கிள்புரம் பகுதியில் முத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மகள் உள்ளார். இவர் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சங்கீதா கல்லூரி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் சங்கீதாவின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

இதுகுறித்து சங்கீதா தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |