Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சியை உலுக்கிய “கல்லூரி மாணவி தற்கொலை” சம்பவம்… குற்றவாளி கைது…!!

கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் குற்றவாளி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள வளநாடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகள் பாக்கியலட்சுமி. இவர் அங்குள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் பாக்கியலட்சுமி டிசம்பர் 29 ஆம் தேதி வீட்டிற்கு அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். மேலும் தன் சாவுக்கு இந்த நபர் தான் காரணம் என்று கூறி ஒரு நபரின் செல்போன் எண்ணை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

காவல்துறையினரின்  முதற்கட்ட விசாரணையில்  அந்த செல்போன் எண்ணின் உரிமையாளர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த வேலுச்சாமி என்பவரது மகன் ராமராஜன் என்று தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் ராமராஜனிடம் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் ராமராஜனும்  பாக்கியலட்சுமியும் காதலித்தது தெரியவந்தது . திடீரென்று ஒரு நாள் பாக்கியலட்சுமி ராமராஜனை  விட்டு விலகுவதாக கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர் பாக்கியலட்சுமி  தன்னுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார். இதன் காரணமாகத்தான் பாக்கியலட்சுமி  தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது . இதையடுத்து காவல்துறையினர் ராமராஜனை  போக்சோ  சட்டத்தின் கீழ் கைது செய்து  தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |