Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. சொன்னதை செய்து காட்டிய தமிழக அரசு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற சட்டப்பேரவையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆராய்ச்சி படிப்புகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து உயர் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக சட்டப்பேரவையில் உயர் கல்வித்துறை மானிய கோரிக்கையில் அரசு கலை கல்லூரிகளில் 10 பாடப்பிரிவின் கீழ் ஆராய்ச்சிப் படிப்புகளை தொடங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

அதன்படி செங்கல்பட்டு, சேலம், கோவை,நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், கும்பகோணம், கோவில்பட்டி, சென்னை நந்தனம் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு கலை கல்லூரிகளில் ஆராய்ச்சி பாடப்பிரிவுகள் புதிதாக தொடங்குவதற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் ஏற்கனவே முதுநிலை மற்றும் பொது அறிவியல் பாடப் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் வணிகவியல், சேலம் மாவட்டத்தில் தாவரவியல், கோவை மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்பம், நாமக்கல் மாவட்டத்தில் விலங்கியல், திருச்சி மாவட்டத்தில் உயிர் வேதியல், திண்டுக்கல் மாவட்டத்திலும் சென்னை நந்தவனம் மாவட்டத்திலும் ஆங்கிலம், கும்பகோணம் மாவட்டத்தில் இயற்பியல், கோவில்பட்டி மாவட்டத்தில் தமிழ், மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் சர்வதேச வணிகம் ஆகிய ஆராய்ச்சி படிப்புகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |