Categories
தற்கொலை திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீட்டு வேலை செய்ய சொல்லி திட்டிய அம்மா… கல்லூரி மாணவி விபரீத முடிவு…!!!

வீரபாண்டியில் வீட்டு வேலை செய்யச் சொல்லி அம்மா திட்டியதால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரில் உள்ள வீரபாண்டி பகுதிக்குட்பட்ட குப்பாண்டபாளையம் கீழ் வீதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவருக்கு 18 வயதுடைய விவேகானந்தி எனும் மகள் உள்ளார்.திருப்பூர் அரசு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கொரோனாநோய் தொற்றின் காரணமாக கடந்த 8மாதங்களாக வீட்டில் இருந்தபடியே  படித்து வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று காலை அவரது தாயான செல்வி வீட்டு வேலைசெய்ய சொல்லி அவளை மிகவும் கடுமையாக திட்டியதாக தெரியவந்தது.

இதனால் மனம் உடைந்து விவேகானந்தி  தனது தாய் வெளியே சென்றவுடன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். செல்வி வீட்டிற்கு திரும்பி வந்து கதவை திறந்து பார்த்த பொழுது தனது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தார்.

இதைத்தொடர்ந்து வீரபாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த வீரபாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த்  மற்றும் போலீசார் விவேகானந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விவேகானந்தி தற்கொலை செய்து கொண்டதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்ற கோணத்திலும் வழக்குப்பதிவு செய்து போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |