Categories
Uncategorized மாநில செய்திகள்

கால்பந்து வீராங்கனை மரணம்… முன் ஜாமீன் கோரிய மருத்துவர்கள்… வெளியான தகவல்….!!!!

சென்னை வியாசர்பாடி சேர்ந்த பிரியா தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் கலந்து கொண்டு பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இவருக்கு மூட்டு வலி காரணமாக பெரியார் நகர் மருத்துவமனில் கால்முட்டி சவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு வலது கால் அகற்றப்பட்டது.‌ ஆனால் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிர் இழப்பு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அரசு மருத்துவர்களின் அலட்சியமற்ற தவறான சிகிச்சை காரணத்தால் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து கவனக்குறைவாக செயல்பட்ட மருத்துவர்கள் இரண்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தங்களுக்கு முன் ஜாமின் வழங்கக் கோரி இரு மருத்துவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், இதுபோன்று பல்வேறு அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து செய்துள்ளோம். அவர்கள் பலரும் இன்று நல்ல நிலையில் உள்ளனர். மாணவி உயிரிழந்தது துரதிஷ்டவசமானது. இந்த விவகாரம் குறித்து மருத்துவர்கள் குழு விசாரணைக்கு ஆஜராக வேண்டியுள்ளதால் தங்களுக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும். மேலும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் சாட்சிகளை கலைக்க மாட்டோம் என்றும் நீதிமன்ற நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வோம் என்று மருத்துவர்கள் இருவரும் மனுவில் உறுதி அளித்தனர். இந்த மனு இன்று நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.

Categories

Tech |