வேட்டவலம் அருகே கல்லூரி மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேட்டவலம் அருகில் பன்னியூர் கிராமத்தில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மூத்த மகன் பிரேம் வயது 21. பிரேம் வேட்டவலத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறான் . கொரோனா பாதிப்பு முடிந்து கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் பன்னியூர் புறாக்கல் மலை பக்கத்தில் மரத்தில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான் இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. இதனை அறிந்த பெற்றோர்கள் மிகுந்த சோகத்தில் தள்ளப்பட்டனர்.எதற்க்காக பிரேம் தற்கொலை செய்தது கொண்டான் என்பது மர்மமாக உள்ளது .
அந்த மாணவன் ஏன் இவ்வாறு செய்து கொண்டான் அதற்க்கு பின்னணியில் ஏதாவது இருக்கிறதா என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் கல்லுரியில் ஏதாவது தகறாரா இல்லை குடும்பத்தில் ஏதாவது பிரச்சனையா என்ற தகவல் ஏதுவும் தெரியவில்லை . இதனை பற்றி வேட்டவலம் காவல்நிலையத்தில் புகார் செய்தனர்.மேலும் போலீஸ் தீவிர விசாரணை மேற்கொன்டு வருகிறது .