Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கழுத்தில் டப்பா சிக்கிட்டு…. செய்வதறியாது சுற்றி திரிந்த நாய்…. தீயணைப்புத் துறையினரின் செயல்….!!

நாயின் கழுத்து பகுதியில் சிக்கியிருந்த டப்பாவை தீயணைப்புத்துறையினர் மெதுவாக அகற்றினர்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தெருநாய் ஒன்று பிளாஸ்டிக் டப்பாவில் இருந்த உணவை சாப்பிடுவதற்காக உள்ளே தலையை விட்டுள்ளது. இதனையடுத்து நாய் டப்பாவில் இருந்த உணவை சாப்பிட்டுவிட்டு தன்னுடைய தலையை எடுக்க முயற்சி செய்தது. ஆனால் நாய் தலை டப்பாவுக்குள் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்தது.

அதன்பின் கடந்த 10 நாட்களாக அந்த நாய் எந்த உணவையும் சாப்பிட முடியாமல் தெருவில் அங்கும் இங்குமாக சுற்றி திரிந்தது. இதுகுறித்து பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு  தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அது  தலையில் சிக்கி இருந்த டப்பாவை மெதுவாக அகற்றினர். அப்போது நாய் மிகவும் சோர்வடைந்து காணப்பட்டதால் அதுக்கு தீயணைப்புத் துறையினர் பால் வாங்கி ஊற்றினர். அந்தப் பாலை குடித்துவிட்டு நாய் அங்கு இருந்து சென்று விட்டது. இவ்வாறு செய்த தீயணைப்பு துறையினரை  பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Categories

Tech |