அரக்கோணம் அருகில் இளம்பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரக்கோணத்தை அடுத்த கிழவனம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் மனோகரன் என்பவர். அவர் பெயிண்டர் தொழில் செய்து வருகிறார். மனோகரனுக்கு மூன்று மகள்களும் , ஒரு மகனும் இருக்கின்றனர்.
இந்நிலையில் அவரது மூன்றாவது மகள் வேணிஷா(22) பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். அவருக்கு கழுத்தின் பின் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு வலி மிகுதியாக இருந்துள்ளது. மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டில் இருந்த எலி மருந்தை சாப்பிட்டு தரையில் மயங்கி விழுந்து விட்டார்.
இதனைக் கண்ட அவரது குடும்பத்தினர் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். வேணிஷாவை உடனடியாக தூக்கி கொண்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு ஓடினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் வேனிஷா பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் இச்சம்பவம் குறித்து அரக்கோணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கழுத்து வலியால் இளம் பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
[6:11 pm, 04/01/2021] Gayu: