கால்வாயில் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த ஆண் பிணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பழவேற்காடு ஏரிக்கரை அருகே கரி மணல் கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் மீன்பிடி வலை கயிற்றால் கை ,கால்கள் கட்டப்பட்டிருந்த நிலையில் ஆண் பிணம் ஒன்று மிதந்து கொண்டிருந்தது. இதை கண்ட அப்பகுதி மக்கள் திருப்பாலைவனம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கால்வாயில் இருந்த ஆண் பிணத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இவரைக் கொலை செய்துவிட்டு கால்வாயில் வீசி சென்றார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.