Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கல்வெட்டில் இருந்த குறிப்புகள்… பல ஆண்டுகாலம் பழமையானது… கண்டுபிடித்த வல்லுநர்கள்…!!

சேரன்மகாதேவியில் இருக்கும் ராமசாமி கோவிலில் சோழர் காலத்து 1100 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேரன்மகாதேவியில் இருக்கும் ராமசாமி கோவிலில் பழமையான கல்வெட்டு ஒன்று இருந்துள்ளது. இது குறித்து நெல்லை வரலாற்று பண்பாட்டு மைய நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி கோவிலுக்கு விரைந்து சென்ற இயக்குனர் மாரியப்பன், சேரன்மகாதேவி தமிழ் பேரவை செயலாளர் பாலு மற்றும் நிர்வாகிகள் அங்கு சென்று ஆய்வு செய்துள்ளனர். அதன்பின் மதுரை மாவட்ட முன்னாள் தொல்லியல் அலுவலர் சாந்தலிங்கத்திற்கு கல்வெட்டு குறித்த குறிப்புகள் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த கோவிலில் இருக்கும் இந்த வட்டெழுத்து கல்வெட்டு சோழர் காலத்தைச் சேர்ந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதாவது ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில் 1015-ஆண்டு இந்த கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது. அதன்பின் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த கல்வெட்டில் இறைவனை “நிகரிலி சோழ வண்ணகர உடையார்” என்று குறிப்பிட்டிருந்தது தெரியவந்துள்ளது. மேலும் அந்த கல்வெட்டில் ஊரின் பெயரானது “முள்ளிநாட்டு பிரம்ம தேயமான சோழ நிகரிலி சதுர்வேதி மங்கலம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த கல்வெட்டில் கோவிலுக்கு தானமாக கொடுக்கப்பட்ட நந்தா விளக்கு பற்றியும், விளக்கு எரிப்பதற்காக வழங்கப்பட்ட நெய் தானம் குறித்தும் எழுதப்பட்டிருந்தது. மேலும் அளவுக்கு அதிகமாக நெய் ஊற்றாமல் இந்த விளக்கினை பயன்படுத்த வேண்டும் என்றும் அந்த கல்வெட்டில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |