கல்வி மாநாட்டில் முன்னணி பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் கல்வி மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்த மாநாட்டில் அமெரிக்காவின் முன்னணி பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 20 துணைவேந்தர்கள், மூத்த அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த மாநாட்டில் காணொளி வாயிலாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களும் பங்கேற்றுள்ளார். இதில் பங்கேற்ற அவர் கூறியதில் “மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உலகளவில் ஆய்வு மற்றும் கல்வி ஒருங்கிணைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் இந்தியாவின் தேசிய கல்விக் கொள்கையானது வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிலும் இந்திய தேசிய கல்வி கொள்கையானது சர்வதேச அளவில் சாதனை படைக்கும் என பருவநிலை மாற்ற மாநாட்டில் பிரதமர் மோடி கூறியிருந்தார். இதற்கு எங்களின் கல்வி கொள்கை மிகவும் உதவியாக இருக்கும். இதனை தொடர்ந்து இந்தியாவும் அமெரிக்காவும் கல்வித்துறையில் இயல்பாகவே நல்லுறவை கொண்டுள்ளன.
மேலும் இந்த நல்ல உறவை பலப்படுத்த தேவையான அனைத்து திறன்களும் இரு நாடுகளுக்கும் இருக்கின்றது” என்று கூறியுள்ளார். குறிப்பாக இணையவழி பாதுகாப்பு, சுகாதார சேவைகள், உயிரி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, தகவல் அறிவியல், வேளாண்மை, காலநிலை போன்ற துறைகளில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும் தேசிய கல்விக் கொள்கையை அமெரிக்க பல்கலைக்கழகங்கள் வரவேற்றன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.