ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்வதற்கு லஞ்சம் வாங்குவதாக புகார் வந்த நிலையில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள பீடர் ரோடு அருகாமையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்திருக்கிறது. இந்த பள்ளிக்கூடத்தில் கல்வி மாவட்ட அலுவலகம் இயங்கி வருவதால் ஆசிரியர்கள் பணியிட மாற்றம் மற்றும் வைப்பு தொகை உள்ளிட்ட பல பணிகளுக்கு லஞ்சம் வாங்குவதாக புகார் வந்துள்ளது.
அந்த புகாரின் காரணத்தினால் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான ஐந்து பேர் இணைந்த குழுவினர் திடீரென அங்கே சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கணக்கில் வராத ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 500 ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்கள் அதிகாரிகளின் கைவசம் பிடிபட்டுள்ளது. இதனை காவல்துறையினர் மீட்டு லஞ்சம் ஒழிப்புத் துறையின் அலுவலகத்திற்கு எடுத்து சென்று தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.