திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்திலுள்ள சாத்தமங்கலம் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் கலைவாணி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கலைவாணியின் மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார்.
இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கலைவாணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கலைவாணியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் திருமணமான 2 மாதத்திலே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.