Categories
அரசியல் ஈரோடு மாவட்ட செய்திகள்

கமல்ஹாசன் மட்டுமே தமிழகத்திற்கு ஆளுமையை கொடுக்க முடியும் – கவிஞர் சினேகன்

தமிழகத்திற்கு மிகச் சிறந்த ஆளுமை தேவைப்படுகிறது எனவும் அந்த ஆளுமை கமல்ஹாசன் அவர்கள் மட்டுமே கொடுக்க முடியும் எனவும் கவிஞர் சினேகன் கூறியுள்ளார்

ஈரோடு மாவட்டத்தில் மண்டல நகர ஒன்றிய செயலாளரை  அறிமுகபடுத்தும் விழா நடைபெற்றது. அவ்விழாவில் கவிஞரும்  மாநில இளைஞரணி செயலாளருமான சினேகன் கூறியதாவது,

மக்கள் நீதி மையத்தின் முக்கிய நிர்வாகிகளாக கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு நான் ஈரோட்டிற்கு வந்திருந்த பொழுது கண்ட எழுச்சியை இப்போதும் என்னால் காணமுடிகிறது. நமது ஒரே இலக்கு 2021 நம்மவரை முதல்வராக அமர வைக்க வேண்டும் என்பதுதான். அதை நோக்கி பயணிக்க நாம் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. தமிழகத்திற்கு சிறந்த ஆளுமை தேவை அந்த ஆளுமையை கமல்ஹாசன் அவர்களால் மட்டுமே கொடுக்க முடியும். அதுமட்டுமின்றி எங்களைப் பொறுத்த மட்டும் எதிர்க்கட்சி என யாரும் இல்லை எதிர்க்கட்சிகள் தான் அதிகம் உள்ளனர் எனக் கூறினார்.

அதுமட்டுமின்றி

  • வாரத்தில் ஒருமுறை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துதல்
  • கமல்ஹாசன் அவர்களின் தொலைநோக்குத் திட்டம் குறித்து பிரச்சாரம் செய்தல்
  • மக்களின் நீண்டகால குறையை அறிந்து நீக்குதல்
  • கட்சியில் உறுப்பினர் சேர்க்கையை அதிகரித்தல்

இவை அனைத்தும் விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |