கொரோனா அச்சத்தால் நடிகர் கமலஹாசன் ஏப்ரல் ஆறாம் தேதி வரை தனிமையில் இருக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வருவதால் ஏப்ரல் 14ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி மக்கள் தங்களது வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி இருக்கின்றனர்.
மேலும் கொரோனா அறிகுறி சிறிதளவு தென்பட்டாலும், மக்கள் தங்களை மற்றவர்களிடம் இருந்து விலக்கி தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் சுகாதாரத் துறை அறிவுறுத்தி வந்தது. அதே போல் கொரோனா அறிகுறி உள்ளவர்களை தேடி கண்டறிந்து அவர்களது வீட்டின் முன் நோட்டீஸ் ஒட்டியும் மாநகராட்சி அந்த வீட்டில் உள்ள நபர்களை தனிமையில் இருக்குமாறு கூறி வந்தது. அந்த வகையில், கொரோனா அச்சம் காரணமாக நடிகர் கமலஹாசன் தனிமையில் இருக்க வேண்டுமென அவர் வீட்டின் முன் மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டி அறிவுறுத்தியுள்ளது. ஏப்ரல் 6-ஆம் தேதி வரை அவரை தனிமையில் இருக்குமாறு மாநகராட்சி அறிவுறுத்தி சென்றுள்ளது.