கமல்ஹாசன் பற்றி யாரும் அறியாத பல உண்மைகள் உள்ளது.
உலக நாயகன் கமல்ஹாசன் என்றால் அதற்கு ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. அவரது ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு புதிய நுட்பம் கதையிலோ , நடிப்பிலோ, தொழில்நுட்ப ரீதியான புதுமையாக இருக்கும். உனக்கு பிடித்த வேலையை செய்தால் நீ அதில் சிறந்து வருவாய் என்பதை அவர் தனது கொள்கையாகக் கொண்டுள்ளார். அதற்கு ஏற்றார் போல் வாழ்ந்தும் காட்டியுள்ளார். இந்நிலையில் பல கண்டர் வர்ஷினிகள கடந்து வந்த கலைஞன் தமிழில் கலையில் கர்ப்பம் கொண்டவர். ஏனென்றால் தன் கருத்தை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காத, மாற்றிக் கொள்ளாத மேதை அவர். மேலும் தான் நடித்த முதல் படத்திற்கே ஜனாதிபதி கையால் தங்கப்பதக்கம் வென்றார். அப்போது அவரது வயது நான்காகும். இதனையடுத்து தனது 18 வயதில் உணர்ச்சிகள் என்ற கதையை எழுதினார்.
இது ஒரு விலைமாதுவை காப்பாற்றி அவர் மீது காதல் கொள்வது போன்ற கதையாகும். இந்நிலையில் இரண்டு அல்லது மூன்று மொழிகளில் எடுக்கப்படும் படங்களில் சில நடிப்புகள் நடிப்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்தி, தெலுங்கு, கனடா, மலையாளம் பெங்காலி என பல மொழி படங்கள் நடித்த ஒரே நடிகர் கமல்ஹாசன். இதனையடுத்து உலகம் வியக்கும் இயக்குனரான க்வென்டின் டரான்டினோ கமலை கண்டு உத்வேகம் அடைந்ததாக கூறினார். ஆளவந்தான் படத்தை பார்த்து தன் கில்பில் அனிமேஷன் காட்சிகளை உருவாக்கியதாக அவர் கூறியுள்ளார். இந்நிலையில் இந்தியாவில் அதிக முறை ஆஸ்காருக்கு தேர்வான படங்கள் கமலுடையது தான். இதனால்தான் அவரை அனைவரும் ஆஸ்கார் நாயகன் என அழைக்கின்றனர். மேலும் கமலின் கனவு படமான மருதநாயகன் இரண்டாம் எலிசபெத் ராணி யாரால் துவக்கப்பட்டது.
கமலின் சிறந்த படைப்பாக திகழ வேண்டிய மருதநாயகம் இன்று வரை முடிவில்லாமல் இருப்பது சற்று வருத்தம் அளிப்பது தான். தன் இயக்கம் மூலம் பல நல்ல உதவிகள் செய்து வருபவர் கமல். இவரது இயக்கம் மூலம் பத்தாயிரம் ஜோடி கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளது. முதல் முதலாக ஒரு கோடி ஊதியம் வாங்கிய நடிகர் கமல் இந்தியாவில் ராஜேஷ் கண்ணா, அமிதாப்பச்சனுக்கு பிறகு இவர்தான் ஒரு கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. அபூர்வ சகோதரர்கள் படத்தில் அப்பு வேடத்தில் குட்டை கமல் வேடத்தை எப்படி எடுத்தார் கமல் என்பது இன்று வரை புரியாத புதிராக தான் இருக்கிறது. 1998-ஆம் ஆண்டு எந்திரன் படத்தை எடுக்க திட்டமிட்ட இயக்குனர் சங்கர் அப்போது தேர்வாக இருந்தது கமல் மற்றும் ப்ரீத்தி சிந்தா. ஆனால் ஒரு சில காரணங்களால் அப்படம் எடுக்காமல் போனது. இதனையடுத்து 2010-ஆம் ஆண்டு ரஜினி நடித்து வெளியானது.