Categories
அரசியல்

இந்திய சினிமாவின் ஒப்பற்ற நாயகன் கமல்ஹாசன்…. அவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இதோ…..!!!!!!

இந்திய சினிமாவில் ஈடு இணையற்ற மற்றும் ஒப்பற்ற நாயகன் நடிகர் கமல்ஹாசன். இவர் இந்திய சினிமாவின் கடவுள் மற்றும் பேய். ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக தன்னுடைய வாழ்க்கையில் பல்துறை சினிமா வித்தகராக வலம் வருகிறார். அவர் தன்னுடைய வாழ்க்கையில் பல சவால்களான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இதனால் ஏற்படும் வெற்றி மற்றும் தோல்விகளை பற்றி கமல்ஹாசன் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார். அவர் சினிமா துறைக்காக தான் ஆட்சிய பங்களிப்பு மற்றும் தொழில்நுட்பங்கள் மூலம் தலை நிமிர்ந்து நிற்கிறார். இந்நிலையில் சிறுவயது முதல் தற்போது வரை கமல்ஹாசனை பற்றிய பலரும் அறியாத சில சுவாரசிய தகவல்களை தற்போது பார்க்கலாம்.

நடிகர் கமல்ஹாசனின் இயற்பெயர் பார்த்தசாரதி சீனிவாசன். சினிமாவுக்காக தன் பெயரை கமல்ஹாசன் என்று மாற்றிக் கொண்டார். 4 வயது இருக்கும் போது களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்ததற்காக அவருக்கு ஜனாதிபதியின் தங்கப்பதக்கம் விருது வழங்கப்பட்டது. கமல்ஹாசன் ஒரு நடிகராக மட்டுமே இயக்குனர், திரைப்பட எழுத்தாளர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர், நடன இயக்குனர், நடன கலைஞர் என தனக்குள் பன்முக திறமைகளை கொண்டுள்ளார். இவருக்கு தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், பெங்காலி, கன்னடம், மற்றும் மலையாளம் என 6 மொழிகள் பேசத் தெரியும்.

அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, பெங்காலி, கன்னடம் என 6 மொழிகளில் நடித்த ஒரே தமிழ் இந்திய நடிகர் என்றால் அது கமல்ஹாசன் மட்டும் தான். அதோடு 5 மொழிகளில் வெள்ளி விழா வழங்கிய ஒரே நடிகர் என்ற பெருமையும் அவரைச் சேரும். இந்தியாவில் இருந்து சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படப் பிரிவின் கீழ் கமல்ஹாசனின் படங்கள் தான் அதிக அளவில் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 7 படங்கள் அனுப்பப்பட்டுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் 17 முறை ஃபிலிம் ஃபேர் விருதை வாங்கி உள்ளார்.

இதனால் கடந்த 2000-ம் ஆண்டு இனியும் எனக்கு அதிக விருதுகள் வழங்க வேண்டாம் என பிலிம் பேருக்கு கடிதம் எழுதி அனுப்பினார். கடந்த 1988 முதல் 1998 வரை அதிக ஒரே பிரபலமாகவும், கடந்த 1994-ம் ஆண்டு ஒரு படத்திற்கு ஒரு கோடி சம்பளம் பெற்று முதல் இந்திய நடிகர் என்ற பெருமையையும் கமல்ஹாசன் பெறுவார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் ரசிகர் மன்றங்களை மாற்றி நற்பணி மன்றமாக மாற்றினார். அனைத்து ரசிகர் மன்றங்களையும் சமூகநலமைப்பாக மாற்றிய ஒரே நடிகர் என்றால் அது கமல்ஹாசன் மட்டும் தான். கடந்த 2016-ஆம் ஆண்டு பிரெஞ்சு அரசு புகழ்பெற்ற செவாலியர் விருதை கமல்ஹாசனுக்கு வழங்கி சிறப்பித்தது.

நடிகர் சிவாஜி கணேசனுக்கு பிறகு செவாலியர் விருதைப் பெற்ற 2-வது நடிகர் என்ற பெருமையை கமல்ஹாசன் பெறுவார். இந்திய நட்சத்திரங்களில் காசோலை மூலமாக சம்பளம் பெறும் நபர்களில் கமல்ஹாசனும் ஒருவர். மேலும் சரியான முறையில் வரி செலுத்தும் நடிகர் கமல்ஹாசன் என்று வருமானவரித்துறையை கமல்ஹாசனை பாராட்டி விருது வழங்கி சிறப்பித்துள்ளது. இப்படி சினிமாக்காக தன்னுடைய முழு உடல் மற்றும் திறமையை அர்ப்பணித்த நடிகர் கமல்ஹாசன் இன்றுவரை ஒரு ஒப்பற்ற நடிகராகவும் சிறந்த சமூக சேவகராகவும் இருக்கிறார். அப்படிப்பட்ட ஒருவருக்கு நாம் இந்த இனிய நாளில் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வோம்.

Categories

Tech |