மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் வீரப்பெண்மணிகளுக்கு என் மகளிர் தின வாழ்த்துக்கள் என்று டுவிட் செய்துள்ளார்.
உலக மகளிர் தினம் இன்று ( மார்ச்8 ஆம் தேதி) ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்தியா உட்பட உலகம் முழுவதும் பலவேறு இடங்களில் பல்வேறு விதமாக மகளிர் தினம் கொண்டாடபடுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் மகளிர் தினத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், பிரபல நடிகருமான கமல்ஹாசன் ட்விட்டரில் மகளிர்தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதில், “பெண்களுக்கு பாதுகாப்பும், சம உரிமையும் என்ற முழக்கத்தோடு பெண்களுக்கு பாரபட்சமின்றி வாய்ப்புக்களும், ஆண்களுக்கு பெண்களை மதித்து நடக்கவும் கற்று கொடுத்தாலே சம நீதி, சம உரிமை என்பது சாத்தியப்படும்.தினசரி இந்த சவால்களை தகர்த்தெறிகின்ற வீரப்பெண்மணிகளுக்கு என் மகளிர் தின வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
பெண்களுக்கு பாதுகாப்பும், சம உரிமையும் என்ற முழக்கத்தோடு பெண்களுக்கு பாரபட்சமின்றி வாய்ப்புக்களும், ஆண்களுக்கு பெண்களை மதித்து நடக்கவும் கற்று கொடுத்தாலே சம நீதி, சம உரிமை என்பது சாத்தியப்படும்.தினசரி இந்த சவால்களை தகர்த்தெறிகின்ற வீரப்பெண்மணிகளுக்கு என் மகளிர் தின வாழ்த்துக்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) March 8, 2020