Categories
மாநில செய்திகள்

5 பேர் கிட்ட இருந்து… 25 பேர் கிட்ட பரவும்… விலகி இருங்கள்.. கமல் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ!

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 5 பேர் கிட்ட இருந்து 25 பேர் கிட்ட பரவும், அது இன்னும் நூறு பேருக்கு பரவாமல் தடுக்க விலகி இருக்கவேண்டும்  என்று கமல் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் 3 பேர் உட்பட நாடு முழுவதும் இந்த வைரஸால் இதுவரை 258 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த வைரஸுக்கு 4 இந்தியர்கள், ஒரு இத்தாலியர் என மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

தமிழக அரசு பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள், மால்கள், திருமண மண்டபங்கள் ஆகியவை வரும் 31 ஆம் தேதி வரை மூடல் மற்றும் பொதுமக்கள் ஓன்று கூடுவதை தவிர்க்கவேண்டும் என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இதனிடையே பிரபலங்கள் பலரும் கொரோனா குறித்த விழிப்புணர்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், பிரபல நடிகருமான கமல் ஹாசன் ட்விட்டரில் கொரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

கொரோனா பரவாமல் தடுக்க ஒரே வழி :

அதில் அவர் பேசியதாவது, கொரோனா வைரஸ் பாதிப்பு 4ஆவது 5ஆவது வாரத்துல பன் மடங்கு அதிகமாகிறது என்கிறத பல நாடுகளில் பார்த்துக்கிட்டிருக்கோம். எதுனால வைரஸ் தொற்று அறிகுறிகள் வெளியே தெரியாத போது பாதிக்கப்பட்ட சிலரும் பல இடங்களுக்கு போயிட்டு இருப்பாங்க. பாதிக்கப்பட்டது 5 பேர் அப்படின்னா அந்த 5 பேர் கிட்ட இருந்து 25 பேர் கிட்ட பரவும், அது இன்னும் நூறு பேருக்கு பரவாமல் தடுக்க ஒரே வழி தான் இருக்கு சோசியல் டிஸ்டன்ஸ்சிங் (விலகி இருத்தல்).

உடல்நிலையை பொறுத்து உயிருக்கு ஆபத்து :

அதீத விழிப்புணர்வு தேவைப்படுகின்ற 4ஆவது வாரத்துல தமிழ்நாடு இப்போம் இருக்கு. கூட்டம் கூடுகிற இடங்களுக்கு போவதை தவிர்த்து விடுங்கள். அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளிய வாங்க நான் இப்ப வெளியே வந்திருக்கிறது இந்த அறிக்கையை  உங்களுக்கு சொல்வதற்காகத்தான். இப்படியெல்லாம் செய்வதன் மூலமாக வைரஸ் உங்களுக்கு பரவாமலும்,  உங்க கிட்ட இருந்துஉங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு பரவாமலும்  தடுக்கலாம். கொரோனா தொற்று இருந்தாலே உயிருக்கு ஆபத்து அப்படிங்கிறது கிடையாதுங்க. ஆனால் வெகு சிலருக்கு அவங்க  உடல்நிலையைப் பொருத்து அது ஆபத்தாக மாறலாம்.

குடும்பத்தோட நேரத்தை செலவிடுங்கள் :

அதனால்தான் எல்லோரிடமும் இருந்து விலகி இருத்தல் அவசியமாகும். வீட்டில் இருங்க.. குடும்பத்தோட நேரத்தை செலவிடுங்கள். மனசுக்கு பிடிச்சவங்க கிட்ட செல்போனில் தினமும் பேசுங்க. ஆனா வாங்க எல்லாரும் மீட் பண்ணலாம் அப்படின்னு கூப்பிட்டா தவிர்த்திருங்க ப்ளீஸ். அவங்களால நமக்கும் நம்மளால அவங்களுக்கோ எதுவும் பாதிப்பு ஏற்படாமல் பொறுப்பாக இருங்கள். வந்தால் செய்ய வேண்டியதை வரும் முன்னாடி செய்வோம். விலகி இருங்கள்.. பாதுகாப்பாக இருங்கள். நமக்கு எதுவும் வராது என்று கண்மூடித்தனமான நம்பிக்கையினாலும் அசட்டு தைரியத்தாலும் இந்த நோய் பரவுவதற்கு நாம் காரணமாக இருந்துவிடக்கூடாது முன்னெச்சரிக்கை தான் முக்கியமான விஷயம் மறந்துவிடாதீர்கள் வணக்கம் என்று கூறியுள்ளார்.

இதோ அந்த வீடியோ 

Categories

Tech |