Categories
சினிமா தமிழ் சினிமா

மருத்துவமனையில் கமல்….. ”விக்ரம்” படப்பிடிப்பில் மாற்றம் செய்த இயக்குனர்….!!!

‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ”விக்ரம்”. இதனையடுத்து, சமீபத்தில் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், அவர் சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்.

விக்ரம் படத்தின் டப்பிங் உரிமை எவ்வளவு கோடி தெரியுமா ? புத்திசாலியான லோகேஷ்  கனகராஜ் - Cinemapettai

இந்நிலையில், ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பில் ஒரு மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கமல் மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் சண்டைக்காட்சி பொள்ளாச்சியில் படமாக்க திட்டமிட்டு இருந்ததாகவும், தற்போது கமல் மருத்துவமனையில் இருக்கும் காரணத்தினால், இந்த படத்தின் சண்டைக் காட்சியை, சென்னையில் உள்ள அரங்கத்தில் படமாக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |