Categories
சினிமா தமிழ் சினிமா

கமல் நடிக்கும் ”இந்தியன் 2”…. படக்குழு கொடுத்த சூப்பர் அப்டேட்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

”இந்தியன் 2” படம் குறித்த அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”விக்ரம்”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் சாதனை படைத்து வருகிறது.

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்துக்கு காரணம் என்ன? - BBC News  தமிழ்

இதனையடுத்து இயக்குனர் ஷங்கர் மற்றும் கமல் கூட்டணியில் உருவாகி வந்த திரைப்படம் ”இந்தியன் 2”. இந்த திரைப்படம் விபத்து காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. 70 சதவீதம் பணிகள் நிறைவு பெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கப்படாமல் இருக்கிறது. இந்நிலையில், இந்த படம் குறித்த அப்டேட் ஒன்றை படக்குழு தெரிவித்துள்ளது.

indian 2 release date: இந்தியன் 2 ரிலீஸ்ல இதுதான் பிரச்னையாம்! அப்ப  பொங்கலுக்கு வராதா? - Samayam Tamil

அதன்படி, டான் வெற்றி விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர் லைக்கா சுபாஷ்கரண், சிவகார்த்திகேயன், சிபிசக்கரவர்த்தி மற்றும் பலர் பங்கேற்றனர். இந்த விழாவில் லைகா சுபாஷ்கனிடம், ”இந்தியன் 2” படம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த லைக்கா சுபாஷ்கரண், ”விரைவில் ”இந்தியன் 2” திரைப்படம் தொடங்க உள்ளதாக தெரிவித்தார். இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Categories

Tech |