கமல் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தில் புதிய பிரபலம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ”விக்ரம்” படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே, இவர் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார்.
இந்த படத்தில் விஜய்சேதுபதி, பகத்பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த படத்தில் மற்றொரு பிரபலம் நடிக்க இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதன்படி, மலையாள நடிகர் செம்பன் வினோத் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.