Categories
சினிமா தமிழ் சினிமா

நீதிமன்ற தீர்ப்பிற்கு காத்திருக்கும் கமல்…. நடக்கப்போவது என்ன…?

உலக நாயகன் கமல்ஹாசன் நீதிமன்றத் தீர்ப்பிற்கு காத்திருக்கிறார் என்று தெரியவந்துள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கரிடம் உலக நாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் கைவசம் இருக்கும்போது இயக்குனர் சங்கர் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் அடுத்ததாக படங்களை இயக்க தயாரானார். ஆனால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் நடிகர் கமல்ஹாசன் அடுத்ததாக பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் “விக்ரம்” படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். ஆனால் கமல்ஹாசனுக்கு இப்படத்தில் நடிக்க இந்தியன்2 படம் தடையாக இருக்கிறது. ஒருவேளை நீதிமன்றத்தில் இந்தியன்2 படத்தை முடித்துவிட்டுதான் இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக வேறு படத்தை இயக்க வேண்டும் என்று தீர்ப்பு வந்தால் கமல் புதிதாக ஒப்பந்தமாகி உள்ள விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு மாறாக ஷங்கருக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால் இந்தியன் 2 படத்தை தள்ளிவைத்து விட்டு விக்ரம் படத்தை நடிக்க கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆகையால் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்காக கமல்ஹாசன் காத்திருப்பதாக தெரியவந்துள்ளது.

Categories

Tech |