Categories
சினிமா தமிழ் சினிமா

என்னத்தான்டா பிராப்ளம் உங்களுக்கு?… கொதித்தெழுந்த கமல்..!!!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் இன்று மாலை தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆதிக்கவாதிகளும் வேண்டாம்- அடிமைகளும் வேண்டாம்! ஊழலற்ற ஆட்சி அமைய எங்களுக்கு வாக்களியுங்கள்! என்னும் அதிமுக விளம்பரத்தையும், மோடியின் ஆட்சி வர வேண்டும் என்ற பாஜக விளம்பரத்தையும் இந்த வீடியோவில் கமல்ஹாசன் விமர்சித்து தள்ளியுள்ளார்.

மக்கள் பிரச்சனைக்காக நான் போராட்டம் நடத்தி கேள்வி கேட்டபோது, ‘நீ யார்டா அதெல்லாம் கேட்பதற்கு, நீ ஒரு நடிகன், உனக்கு என்ன தெரியும்? களத்தில் இறங்கிப்பார்’ என்று சவால் விட்டார்கள். சரி, சொல்றாங்களே.. இறங்கித்தான் பார்ப்போமே என்று நான் தெய்வமா நெனச்சிக்கிட்டிருந்த தொழிலை விட்டுட்டு இங்கே வந்தா, இப்போ ‘ஏன்டா வந்த? என்று கேட்கின்றனர். ‘என்னத்தான்டா பிராப்ளம் உங்களுக்கெல்லாம்?’ இதை நான் கேட்கிறேன் என கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Categories

Tech |