H.ராஜா “யுவர் ஆண்டி இந்தியன்” என்று சொல்லும் போது TV_யை கமல் உடைப்பது போன்ற வீடியோ_வை பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. தமிழகத்தை பொறுத்தவரை இந்த தேர்தல் 5 முனை போட்டியாக பார்க்கப்படுகின்றது. அதிமுக தலைமையிலான கூட்டணியும் , திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் பிரதானமாக மோத இருக்கும் இந்த தேர்தல் களத்தில் அமமுக , மக்கள் நீதி மைய்யம் மற்றும் நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன.
தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பரப்புரையில் எடுப்பது வருகின்றனர். சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மைய்யத்திற்க்கு ஆதரவாக வாக்கு கேட்டு தனது ட்வீட்_டர் பக்கத்தில் வீடியோ பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/ikamalhaasan/status/1116654132574609408
கமல் பதிவிட்டுள்ள வீடியோ_வில் 1 நிமிடம் 41 வினாடிகள் பதியப்பட்டுள்ள அந்த வீடியோவில் அரசியல் கட்சி தலைவர்கள் ஸ்டாலின் , மோடி என பேசுகின்றார்கள் பின்னர் பாஜகவின் தேசிய செயலாளர் H.ராஜா “யுவர் ஆண்டி இந்தியன்” என்று சொல்லும் போது தனது சின்னமான டார்ச்லைட்_டை வைத்து TV_யை உடைத்து விடுகின்றார். பின்னர் நாட்டின் அவலங்கள் குறித்து வாக்கு சேகரிப்பது போன்ற வீடியோ வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.