கமல் பிரச்சாரத்தில் கொரோனா பயம் காரணமாக குழந்தையை கையில் வாங்காமல் பெயர் வைத்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அனைத்து கட்சியினரும் தங்களுடைய தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் நடந்து முடிந்த எம்.பி தேர்தலில் முதன்முறையாக மக்கள் நீதி மையம் கட்சி கோவையில் நல்ல வாக்குகளை பெற்றிருந்ததால் அதே நம்பிக்கையோடு இப்போதும் கமல்ஹாசன் பிரச்சாரத்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கோவையில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வரும் கமலஹாசனிடம், கூட்டத்தில் ஒரு குழந்தைக்கு பெயர் வைக்க சொல்லி தாய் ஒருவர் தன்னுடைய குழந்தையை கொடுத்துள்ளார். அப்போது கொரோனா காலகட்டத்தில் கூட்டங்களுக்கு இடையில் குழந்தைகளைக் கொண்டு வர வேண்டாம் என்று அறிவுரை கூறிய கமல், குழந்தையை கையில் வாங்காமல் குழந்தையின் தாயின் பெயரான ராஜலட்சுமி என்பதை அந்த குழந்தைக்கு சூட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.