அமெரிக்காவில் துணை ஜனாதிபதியின் வீட்டின்முன் துப்பாக்கியுடன் மர்மநபர்… தகவலறிந்த காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை.
அமெரிக்காவில் கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதியாக பதவியில் இருக்கிறார். இவரின் வீடு, வாஷிங்டன் நகரில் அமைந்துள்ள தீ நேவல் அப்சர்வேட்டரி பகுதியில் அமைந்துள்ளது. இதனை கடற்படை கண்காணிப்பு இல்லம் என்றும் கூறப்படுகின்றன. இந்த கடற்படை வீட்டினை புதுப்பிக்கும் வேலை நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக, அமெரிக்காவில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் வசிக்காமல் அமெரிக்க ஜனாதிபதியின் மாளிகையான வெள்ளை மாளிகையில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிளேயர் மாளிகையில் தனது கணவர் டக்ளஸ் எம்.ஹாப் மற்றும் தனது குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் துணை ஜனாதிபதியின் கமலா ஹாரிஸ் கடற்கரை கண்காணிப்பு வீட்டின் முன் நேற்று ஒரு நபர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நின்று கொண்டிருந்தார். அந்த தகவலை அறிந்த ஜனாதிபதி கமலா ஹாரிஸ் காவல்துறையினருக்கு தெரிவித்துள்ளார். இத்தகவலை அறிந்த அமெரிக்க ரகசிய சேவை காவல்துறை படையினர் உடனடியாக அங்கு சென்று, அந்த நபரை சுற்றிவளைத்து உடனடியாக கைது செய்தனர். அதன்பின் அந்த நபரை வாஷிங்டன் பெருநகர காவல் துறையினரிடம் விசாரணைக்காக ஒப்படைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து விசாரணை செய்த காவல்துறையினர் அந்த மர்ம நபர் யார் என்பது தெரியவந்துள்ளது. அந்த நபர் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சான் அண்டனியோ நகரைச் சேர்ந்தவர் என்றும், அவரின் பெயர் பால் முர்ரே 32 வயது உடையவர் என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் அந்த நபர் மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளன.
மேலும், அந்த நபரிடம் துப்பாக்கி, வெடிபொருட்கள் போன்றவற்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இதனால் அந்த நபரின் மேல் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். இது சம்பந்தமாக கைது செய்யப்பட்ட பால் முர்ரே, கமலா ஹாரிசை கொள்ள குறி வைக்கிறாரா? என்கிற கேள்வியும் தற்போது சந்தேகத்தின்பேரில் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் உயிருக்கு பாதுகாப்பு அளித்து, அந்த நபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழுமையான விசாரணைக்கு பின்பே என்னவென்பது தெரியவரும் என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.