அமெரிக்காவில் துணை ஜனாதிபதி வீட்டின் முன்பு ஒரு நபர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா நாட்டின் துணை ஜனாதிபதியாக பதவி வகிப்பவர் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் (56) இவரின் அதிகாரபூர்வமான இல்லம் வாஷிங்டனில் கடற்படை கண்காணிப்பு இல்லம் என்று அழைக்கப்படும் “தி நேவல் அப்சர்வேட்டரி ” உள்ளது.அவர் வீட்டின் முன்பு துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் ஒரு மர்ம நபர் சந்தேகத்தின் பெயரில் சுற்றி வருவது தெரிய வந்தது. அப்போது அவரை அமெரிக்க ரகசிய சேவை போலீஸ் படையினர் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்து வாஷிங்டன் பெருநகர் காவல் துறையிடம் ஒப்படைத்தார்கள் .
மேலும் அந்த மர்ம நபரை உளவுத்துறை அதிகாரிகளின் அறிக்கையில் அவர் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சான் ஆன்டனியோ நகரை சேர்ந்த பால் முர்ரே (31). மேலும் போலீசார் அவர் மீது பல சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அவரிடமிருந்து துப்பாக்கிகள் வெடிமருந்துகள் ஆயுதங்கள் என அனைத்தும் கைப்பற்றப்பட்டன. இந்நிலையில் கைது செய்யப்பட்ட பால் முர்ரே துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் மீது குறிவைத்துள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பால் முர்ரே துணை ஜனாதிபதியின் கடற்படை கண்காணிப்பு இல்லத்தில் முன் நின்று போது அவர் இந்த இல்லத்தை புதுப்பிப்பதற்கான வேலைப்பாடுகள் நடந்து கொண்டிருப்பதால் அமெரிக்க ஜனாதிபதியின் மாளிகைக்கு அடுத்துள்ள பிளேயர் மாளிகையில் தன் கணவர் டக்ளஸ் எம் ஹாப் மற்றும் தன் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது அதிகாரப்பூர்வமான கடற்படை கண்காணிப்பு இல்லத்தில் நேற்று முன்தினம் மர்ம நபர் துப்பாக்கியுடன் சுற்றி வந்தது கமலா ஹாரிஷுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.