Categories
உலக செய்திகள்

“உங்களுடைய வளர்ச்சிக்கு அவங்க பெயரை பயன்படுத்தாதீங்க”… எச்சரிக்கை விடுத்த வெள்ளை மாளிகை….!!

கமலா ஹாரிஸின் பெயரை தனிப்பட்ட முறையில் பயன்படுத்தக் கூடாது என்று மீனா ஹாரிஸ்க்கு வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கமலா ஹாரிஸின்  தங்கை மகளான மீனா ஹாரிஸ் வழக்கறிஞர் மற்றும் தொழில் முனைவராக உள்ளார். மீனா ஹாரிஸ் “phenomenal” என்ற ஆடை தொண்டு நிறுவனத்தையும்  நடத்தி வரும் நிலையில் அந்த  நிறுவனம்  கமலா ஹாரிஷை குறிப்பிட்டு “Vice President Aunty” என்று அச்சடிக்கப்பட்டு ஆடை ஒன்றை வெளியிட்டது. இந்த செயலானது சட்டத்திற்கு எதிரானது என்று வெள்ளை மாளிகை கூறியது.

மேலும்  துணை அதிபர் கமலா ஹாரிஸின் பெயரை தனிப்பட்ட முறையிலும் வணிக வளர்ச்சிக்காகவும்  மீனா ஹாரிஸ் பயன்படுத்தி வருவது வெள்ளை மாளிகையில் பணிபுரியும் அதிகாரிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மீனா ஹாரிஸ்  தனது பெயரை விளம்பரப்படுத்த துணை அதிபரின் பெயரை பயன்படுத்த கூடாது  என்றும் இதே நடவடிக்கைகள் மீண்டும் தொடரக்கூடாது என்றும் வெள்ளை மாளிகை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |