விவசாயிகளின் போராட்டத்திற்கு இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸின் தங்கை மகள் ஆதரவு தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளனர். இந்நிலையில் பலரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்திய அளவில் மட்டுமே இருந்து வந்த விவசாயிகள் போராட்டம் தற்போது சர்வதேச அளவில் பேசு பொருளாக மாறியிருக்கிறது. உலகளவில் பிரபலங்கள் பலரும் விவசாயிகள் போராட்டம் தொடர்பான ஆதரவு பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் தங்கை மகள் மீனா ஹரிஷ், விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இவர் அமெரிக்காவில் அரசு வழக்கறிஞராக இருக்கிறார். அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “அமெரிக்க ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் தான் இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பது இரண்டுமே சம்பந்தப்பட்டதுதான். இணைய சேவையை முடக்கி துணை ராணுவத்தை பயன்படுத்தி வரும் இந்திய அரசியலை கண்டு நாம் அறசீற்றம் செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
https://twitter.com/i/status/1356458654598221825