ஐஏஎஸ் அதிகாரிகளின் பணிகளின் விதிகளில் திருத்தம் மேற்கொள்ளும் தீர்மானத்தை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும் என்று கமலஹாசன் வலியுறுத்தியிருக்கிறார்.
மக்கள் நீதி மையத்தின் தலைவரான நடிகர் கமல்ஹாசன் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் மாநிலங்களில் பணியாற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் அதிகாரிகளை தேவைப்படும்பட்சத்தில் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசாங்கத்தின் பணிகளுக்கு அழைக்கும் அதிகாரம் கடந்த 1954 ஆம் வருடத்தின் இந்திய ஆட்சிப் பணி விதியை 6-ஆம் புதிய திருத்தம் அளிக்கிறது என்று கூறியிருக்கிறார்.
குடிமைப் பணி அதிகாரிகளின் பணி விதிகளில் திருத்தம் செய்யும் முடிவை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். இந்தத் திருத்தம் மாநில அரசின் உரிமைகளைப் பறிப்பதோடு கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானது. pic.twitter.com/uO6vzLPdIw
— Kamal Haasan (@ikamalhaasan) January 22, 2022
மேலும், இதுபற்றி மத்திய அரசு கடந்த டிசம்பர் மாதத்தில் அனைத்து மாநில அரசுகளிடமும் கருத்து கேட்டது. மத்திய அரசு இவ்வாறு புதிய திட்டம் கொண்டு வருவது மாநில அரசின் உரிமையை மொத்தமாக எதிர்க்கிறது. மத்திய அரசின் இந்த தீர்மானம், மாநிலங்களது நிர்வாகத்தை பாதிக்கச் செய்யும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் மத்திய அரசு, இந்திய ஆட்சிப் பணியின் விதியில் திருத்தம் செய்யும் தீர்மானத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று கூறியிருக்கிறார். மேலும், தமிழ்நாடு அரசு, இந்த திருத்தத்தை எதிர்த்து தன் நிலைப்பாடு மற்றும் எதிர்ப்பை பலமாக பதிவு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.