பிரபல மலையாள நடிகரின் மகன் கமல்ஹாசனின் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
தமிழ் திரையுலகில் பல்வேறு வெற்றி படங்களை தந்தவர் உலக நாயகன் கமல்ஹாசன். தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதனை அடுத்து போஸ்டரின் மூலம் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து விஜய் சேதுபதி மற்றும் மலையாள நடிகர் பகத் பாசிலும் நடிக்கவுள்ளனர் என்பது உறுதிசெய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து கடந்த வாரம் தொடங்கிய படப்பிடிப்பில் இருந்து கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதியின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அண்மையில் பகத் பாஸிலும் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். மேலும் விக்ரம் படத்தில் மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியானது. இப்போது இதனை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.