விக்ரம் திரைப்படத்தில் கமல்ஹாசன் எந்த தோற்றத்தில் நடித்து வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
உலகநாயகன் கமலஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் இணைந்து தமிழ் சினிமாவின் மற்றொரு முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதியும், பிரபல வில்லன் நடிகர் பகத் பாசிலும் நடித்து வருகின்றனர்.
மூன்று முக்கிய நடிகர்கள் இப்படத்தில் நடித்து வருவதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி மிகவும் வைரலானது.
இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபலம் ஷிவானி, மைனா நந்தினி, மகேஸ்வரி ஆகிய மூவரும் நடித்து வருவதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் இப்படத்தில் கமல்ஹாசன் மிகவும் இளமையாக, அதாவது 80 களில் அவர் எப்படி இருந்தாரோ அதே போன்ற தோற்றத்தில் நடித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. இதற்காக புதிய தொழில்நுட்பத்தை படக்குழு பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.