கமலின் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு 60% முடிவடைத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் உலக நாயகனாக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் ஷங்கர் இயக்கத்தில் நடித்த ”இந்தியன்” திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப் பெரிய வெற்றி அடைந்தது. இதனையடுத்து, இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிக்கொண்டிருந்தது.
மேலும், கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் கொரானா காரணமாக படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இதனிடையே ‘இந்தியன் 2’ படம் கைவிடப்பட்டதாக வதந்திகள் பரவியது. இதுபற்றி படக்குழுவினரிடம் விசாரித்த போது, இந்த படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாகவும், இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் எனவும் தெரிவித்தனர்.