கமலின் அடுத்தப் படத்தில் யார் வில்லனாக நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹிட் அடிக்கும் படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்ததாக கமல் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்க உள்ளார். கமல் தற்போது அரசியலில் பிஸியாக இருப்பதால் தேர்தலுக்குப் பின்னர் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும்.
கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக யார் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் வில்லனாக நடிப்பதற்கு படக்குழு அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.