ஜெயலலிதா இருந்திருந்தால் தமிழக மக்களுக்கு என்ன செய்வாரோ அதைத்தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் செய்து வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மதுரை தமீமுன் தெரு பகுதியில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அமைச்சர் செல்லூர் ராஜு இன்று வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ” நாட்டு மக்கள் விரும்புவதைத் தான் முதலமைச்சர் விரும்புவதாக கூறினார். டாஸ்மாக் விவகாரத்தில் கமல் பேசியதற்கெல்லாம் பதில் கூற முடியாது என்றும் கூறியுள்ளார். மேலும், டாஸ்மாக் விவகாரத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டாம் என விஜயகாந்த் ட்வீட் செய்திருந்தார்.
இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது, இதெற்கெல்லாம் தான் பதில் சொல்ல விரும்பவில்லை எனக் கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் வருவாய் இழப்பீடை சரி செய்ய மதுக்கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டன. அதன்படி, மே7 ம் தேதி மதுக்கடைகள் திறக்கப்பட்டு ரூ.170 கோடிக்கு மது விற்பனையானது. மேலும், கடந்த 2 நாட்களில் ரூ.294 கோடிக்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது.
கமல் ட்வீட்:
மருத்துவர்கள்,காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து போராடிக் கொண்டு இருக்கின்றனர். நடுத்தர மக்கள் வீட்டில் கட்டுண்டு இருக்கின்றனர். ஏழைகள் வாழ வழியின்றி தவிக்கின்றனர். தற்போது டாஸ்மாக் திறந்துவிட்டு, ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா?” என்று அவர் நேற்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மதுக்கடைகளை மூட கோரி நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.
இந்த நிலையில், இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு விதிகளை சரியாக பின்பற்றவில்லை எனக் கூறி மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது. மேலும் ஆன்லைன் விற்பனைக்கு அனுமதி வழங்குவது. இந்த நிலையில், மதுக்கடைகளை மூடவேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவால் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், எனவே தடை உத்தரவை நீக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தங்கள் தரப்பு கருத்தை கேட்டறிந்த பின்பு முடிவெடுக்க வேண்டும் என பாமக மற்றும் சில அமைப்புகள் சார்பில் கேவியட் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.