Categories
சினிமா தமிழ் சினிமா

”பொன்னியின் செல்வன்” படக்குழுவுக்கு கமல் கொடுக்கும் சர்ப்ரைஸ்…. என்னன்னு தெரியுமா….?

பொன்னியின் செல்வன் பட குழுவுக்கு கமல் ட்ரீட் கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த 30ஆம் தேதி ரிலீசான திரைப்படம் ”பொன்னியின் செல்வன்”. இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

Kamal wanted to act as Vandiyadevan in ponniyin selvan story

இந்த படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி பல திரையுலக பிரபலங்களும் புகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், பொன்னியின் செல்வன் படக்குழுவுக்கு நடிகர் கமல் ஸ்பெஷலாக ட்ரீட் கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வேளச்சேரி திரையரங்கில் இன்று மாலை 7 மணி காட்சி அனைத்தையும் அவர் முன்பதிவு செய்துள்ளதாகவும், மேலும் பட குழுவினருடன் இணைந்து இந்த படத்தை பார்க்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |