காமராஜர் உருவ சிலைக்கு அமைச்சர் மற்றும் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டம் கடற்கரையிலுள்ள மணிமண்டபத்தில் அரசு சார்பாக பெருந்தலைவர் காமராஜரின் 119- வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். இதனையடுத்து தமிழக தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
அதன்பின் விஜய் வசந்த் எம்.பி.யும் நிகழ்ச்சியில் பங்கேற்று காமராஜரின் உருவ சிலை மீது மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் எம்.ஆர் காந்தி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மேலும் இதில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் தாமரை பாரதி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ஆர்.எஸ்.பார்த்தசாரதி மற்றும் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.