மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளராக (பொறுப்பு) சங்கர் இருந்துவரும் நிலையில், அப்பதவிக்கு பல்கலைக்கழகம் சார்பாக விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இதற்காக 24 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் என். ராஜேந்திரன், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் எம். கிருஷ்ணன், பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்கள் தீனதயாளன், ராமகிருஷ்ணன், லட்சுமிபதி, ராஜ்குமார் ஆகியோரைக் கொண்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டு, வந்திருந்த விண்ணப்பங்களிலிருந்து 19 பேர் நேர்காணலுக்காக அழைக்கப்பட்டிருந்தனர்.
நேற்று நடைபெற்ற இந்நேர்காணலில் 16 பேர் பங்கேற்றனர். தகுதியின்மை காரணமாக ஒருவரும் தேர்வாகவில்லை என்பதால், மீண்டும் கூடிய சிண்டிகேட் உறுப்பினர்கள், மறுபடியும் விளம்பரம்செய்து, பதிவாளர் பணிக்கான புதிய தேர்வுக்குழு ஒன்றை நியமித்து தேர்ந்தெடுப்பர் என்று முடிவுசெய்தனர்.