Categories
மாநில செய்திகள்

கைமாறும் கொடநாடு வழக்கின் ஆவணங்கள்….. சிபிசிஐடி போட்ட பலே பிளான்…. வெளியான பரபரப்பு தகவல்…!!!!

அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வன் தலைமையில் இரண்டு அணிகளாக பிரிந்து அரசியல் செய்து வருகின்றனர். ஏற்கனவே டிடிவி தினகரன் தலைமையில் ஒரு அணி, சசிகலா தலைமையில் மற்றொரு அணியின் பிரிவினைகளால் துவண்டு கிடைக்கிறது. இந்த இந்நிலையில் கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு பெரிய தலைவலியாய் வந்து நிற்கிறது. ஏனெனில் இந்த விவாகரத்தில் கட்சியினர் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஒட்டுமொத்த விசாரணை முடிவடைந்த பிறகு புதிய குற்றவாளிகள் யார் என்று தெரிய வரும். இதற்கு முன்னதாக வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

அதனை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2021 அமைந்ததையடுத்த கோடநாடு வழக்கு விசாரணை ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் தலைமையில் வேகமெடுத்தது. இதில் எதிர்தரப்பின் முக்கிய தலைவர்கள் சிலருக்கு அச்சத்தை ஏற்படுத்திள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் கொடநாடு வழக்கை சிபிசிஐடி மாற்றி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஐபிஎஸ் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். இது குறித்து ஆவணங்கள் தற்போது ஊட்டியில் இருக்கின்றன. இதனை விரைவாக சிபிசிஐடி போலீசார் கையில் ஒப்படைக்க வேண்டியது அவசியம்‌ அதற்கான நடவடிக்கை முடக்கிவிடப்பட 1500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை நகலை கூடுதல் எஸ்.பி. னகிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஊட்டி செசன்ஸ் கோர்ட் நீதிபதி முருகனிடம் ஒப்படைத்தார். இதனையடுத்து ஆவணங்கள் அனைத்தும் சென்னை கொண்டுவரப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சிபிசிஐடி போலீசாரின் கைகளில் ஆவணங்கள் கிடைத்தவுடன் அடுத்தக்கட்ட விசாரணை வேகமாக நடைபெறும் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |