ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக வழிபாட்டு தலங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கொரோனா படிப்படியாக குறைந்து வருவதால் அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி மக்கள் கோயில்களுக்கு சென்று தரிசனம் பெற்றுச் செல்கின்றனர். இந்நிலையில் அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி சாலையில் உள்ள குறைகளை தீர்க்கும் குமரன் கோவிலில் முருகப்பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், திரவியப்பொடி மற்றும் பழங்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.
இதனையடுத்து முருகப்பெருமான் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்துள்ளார். அதன்பின் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்று அதில் பெரும்பாலான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் அரோகரா கோஷங்களை எழுப்பி வழிபாடு செய்தனர். இதேபோன்று அரியலூர் நகரில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது.