வயிற்றுப்புண்கள்,குடல்புண், அஜீரணக் கோளாறுகள் போன்றவற்றை குணமாக்கும் ஆரோக்கியம் நிறைந்த கம்பங்கூழ் செய்யலாம் வாங்க .
தேவையானபொருட்கள் :
கம்பு மாவு – 1 கப்
மோர் – 2 கப்
நறுக்கிய சின்ன வெங்காயம் – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு.
சீரகம் – 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய் – சிறிதளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, அதனுடன் உப்பு, நல்லெண்ணெய், கம்பு மாவு சேர்த்து கைவிடாமல் கிளறி இறக்க வேண்டும். பின் ஆறியதும் சீரகம், மோர் சேர்த்து கரைத்து சின்ன வெங்காயம் சேர்த்துப் பரிமாறினால் சுவையான கம்பங்கூழ் தயார் !!.