கமிலா தனது முதல் கணவர் ஆண்ட்ரூ பார்க்கர் பவுல்ஸை விவாகரத்து செய்ததற்கான உண்மை காரணம் தெரிய வந்துள்ளது.
கமிலாவுக்கும், ஆண்ட்ருவுக்கும் கடந்த 1973- ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த 1995-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர். இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அதன் பின்னர் கமிலா, சார்லஸை கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சார்லஸ் – கமிலா என்ன தான் தாமதமாக திருமணம் செய்து கொண்டாலும் இவர்கள் இருவரும் வெகுகாலமாகவே காதலித்து வந்தனர். அதன் அடிப்படையில் தங்கள் முதல் திருமண பந்தத்தின் போதே இருவரும் காதல் வயப்பட்டிருந்தனர்.
கடந்த 1992- ஆம் ஆண்டு சார்லஸ் – கமிலா இரவு நேரத்தில் வெகுநேரம் தொலைபேசியில் பேசிய விவகாரம் பூதாகரமாகி பொதுமக்களுக்கு தெரிய வந்தது. இருப்பினும், கமிலா முன்னாள் பிரிட்டிஷ் இராணுவ அதிகாரியான தனது கணவர் ஆண்ட்ரூவை பிரிந்ததற்கு இது அதிகாரப்பூர்வ காரணம் இல்லை. இதனை அடுத்து விவாகரத்து நடவடிக்கையின் போது இது தொடர்பான அறிக்கையில், கமிலா மற்றும் ஆண்ட்ரூ சேர்ந்து வாழ்வதற்கான ஆர்வம் அவர்களிடமில்லை என்று கூறப்பட்டுள்ளது.
அதே சமயத்தில் டெய்லி எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை நிபுணர் வெய்ன் பிரான்சிஸ் இது குறித்து முக்கிய உண்மையை வெளிப்படுத்தியுள்ளர். இதனை தொடர்ந்து கமிலா சார்லஸுடன் வைத்திருந்த தொடர்பு விவகாரத்தால் ஆண்ட்ரூ பொதுவெளியில் அவமானப்படுத்தப்பட்டு உணர்ந்ததாக தெரிவித்திருந்தார். ஆனால் இது விவாகரத்து ஆவணத்தில் குறிப்பிடப்படவில்லை. இதோடு ஆண்ட்ருவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் காதல் இருந்தது தெரிய வந்துள்ளது. அதாவது 1996 ஆம் ஆண்டு ரோஸ்மேரி பிட்மேனை திருமணம் செய்து கொண்டார். ரோஸ்மேரி புற்றுநோயால் கடந்த 2010 ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார் அவர் இறக்கும் வரையில் ஆண்ட்ரூ அவருடன் வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.